பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேதாவிகள் பித்து


பல மேதாவிகளின் வாழ்க்கையிலே, சில விநோதங்கள் காணப்படுகின்றன. அவர்கள் விசித்திரமான இரட்டை வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய மேதையைக் காட்டும் செயல்கள் மட்டில் அவர்களிடம் வெளிப்பட்டிராவிட்டால், அவர்களின் சில விசித்திர நடவடிக்கைகளைக் கண்டு, அவர்களை ஜனங்கள் அநேகமாய்ப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

டாக்டர் ஜான்சன் என்னும் ஆங்கிலப் பண்டிதரைப் பற்றி நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். ஆரம்ப காலத்தில் பிரசித்தமான ஆங்கில அகராதி ஒன்றைத் தயாரித்தவர். விகடமாய்ப் பேசுவதிலும், எழுதுவதிலும் திறமை மிகுந்தவர்.

அவர் வீதியில் செல்லும்பொழுது, ஒவ்வொரு லாந்தர்க் கம்பத்தையும் தொட்டுக்கொண்டே செல்லுவது வழக்கம். ஏதேனும் ஒரு கம்பத்தைத் தொடுவதற்கு விட்டுப்போனால், ஏதோ சாமானை மறந்து வைத்துவிட்டு