பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேதாவிகள் பித்து

39


வந்தவர் போல், அந்த வீதியின் துவக்கக் கோடிக்குத் திரும்பி ஓடுவார். மறுமுறையும், ஒவ்வொன்றாய் வழியிலுள்ள கம்பம் முழுவதையும் விடாது தொட்டுக் கொண்டே வருவார். லாந்தர்க் கம்பங்கள் இல்லாத வீதியில் செல்ல அவருக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காது. அப்படிப்பட்ட வீதியில் செல்ல நேர்ந்தால் தாம் செத் துப் போய்விடுவோம் என்றுகூட அவருக்கு ஒரு பயம் உண்டு. லாந்தர்க் கம்பங்களையெல்லாம் தொட்டுவிட்டு வருவதால்தான் தாம் நலமாய் வாழ்வதாக அவர் நம்பினார்.

ஆங்கிலக் கவி ஷெல்லியின் பாக்கள் அற்புத மானவை என்று உலகமெங்கும் மெச்சப்படுகின்றன. பிற நாட்டு மக்களையெல்லாம் சீர்திருத்த வேண்டுமென்று அவருக்கு ஓர் ஆசையுண்டு. ஏதாவது ஒரு நாட்டு மக்களுக்குத் தாம் சொல்ல விரும்பும் புத்திமதிகளை ஷெல்லி சில காகிதங்களில் எழுதுவார். அவைகளைக் கண்ணாடிப் புட்டிக்குள் அடைப்பார். புட்டிக்கு மேலே, அந்த நாட் டின் பெயரை விலாசமாக எழுதுவார்; தபாலில் போடுவதற்காக அன்று ; கடலில் எறிவதற்காகத்தான் ! “கடலில் எறிந்தால், அது மிதந்துகொண்டே போய் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த நாட்டினர் கைக்குக் கிடைத்து விடும்” என்பது அவரது பூரண நம்பிக்கை !

முற்பிறவி ஒன்று உண்டு என்பதையும் அவர் மிகவும் நம்பியிருந்தார். ஒரு சமயம், ஒரு குழந்தையை அதன் தாயிடமிருந்து முரட்டுத்தனமாகப் பறித்து, தம் கையிலே வைத்துக்கொண்டு, “நீ எந்த உலகத்திலிருந்து வந்தாய் ? சொல், நிஜமாகச் சொல்” என்று கேள்வி கேட்க ஆரம்பிக்கவிட்டார். குழந்தைக்கு என்ன தெரியும்? பாவம்! அது கதறி அழ ஆரம்பித்துவிட்டது. “இது ஏதடா பெரிய சனியனாயிருக்கிறது! பதிலே சொல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே !” என்று