பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வாழ்க்கை விநோதம்

முணுமுணுத்துவிட்டு அகன்றார். சிறு குழந்தைகளைப் போலக் காகிதக் கப்பல் செய்து தண்ணீரில் மிதக்க விட்டுப் பார்ப்பதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. பையில் எந்தக் காகிதம் இருந்தாலும் சரிதான், அது என்ன காகிதம் என்று பார்க்காமலே கப்பல் செய்துவிடுவார். ஒரு சமயம் பத்துப் பவுன் கரன்ஸி நோட்டு ஒன்றையே காகிதக் கப்பலாய்ப் பண்ணிவிட்டாராம்!

அலெக்ஸாண்டர் டுமாஸ் என்ற பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர் ஓர் விசித்திரப் பழக்கம் கொண்டவர். நாவல்களை நீலக் காகிதங்களிலும், பாட்டுக்களை மஞ்சள் காகிதங்களிலும், கட்டுரைகளைச் சிவப்புக் காகிதங்களிலும்தாம் அவர் எழுதுவார். ஒன்றை மற்றொரு காகிதத்தில் எழுத ஆரம்பித்தால் சுகமாய் வராது என்று அவர் திடமாக நம்பினார்.

‘தீமையின் மலர்கள்’ (Flowers of Evil) என்ற அருமையான நூலை எழுதியுள்ள சார்ல்ஸ் பாடிலேர் என்பவர், தம்மை அனைவரும் கவனிக்கவேண்டும் என்ற ஆசை கொண்டவர். அதற்காக, அவர் தம் தலைமயிருக்குப் பச்சை வர்ணம் பூசிக்கொள்வார். அந்த அழகோடு, ஹோட்டலுக்குச் செ ல் வார் . அங்கே சாப்பிடும் பொழுது, “என்னுடைய தகப்பனை நான் இரவில் கொன்றேன், நீ குழந்தைகளைத் தின்றிருக்கிறாயா ? அவை என்ன ருசி தெரியுமா?” என்றெல்லாம் கூச்சலிடுவார். அக்கம் பக்கத்திலுள்ள எல்லோரும் இந்தச் சத்தத்தைக் கேட்டு, இவன் யாரடா ! என்று திரும்பிப் பார்த்து, இவரது அழகைக் கூர்ந்து கவனிப்பார்கள். அப்பொழுது அவர் பூரிப்புற்று, முதல் தரமான ஸெண்டுகளை யெல்லாம் உடைத்து, தம்மேலே விட்டுக்கொண்டு ‘கம கம’ வென்று வாசனை வீசும்படி செய்வார்.

இவரைப் போலவே பால்ஸாக் என்ற பிரபல ஆசிரியரும், பிறர் தம்மைக் கண்டு மகிழ்ச்சி யடையவேண்டும்.