பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேதாவிகள் பித்து

31


என்பதற்காகச் சிவப்பு, கறுப்பு, பச்சை, மஞ்சள் முதலிய பலவித வர்ணங்களும் கலந்த உடைகளை அணிந்து கொள்வார். அவர் எழுத ஆரம்பிக்கும்போது, பாதிரிகள் போட்டுக்கொள்வது போல, வெள்ளை ஆடை அணிந்து கொள்வார். தலையில் கறுப்புக் குல்லாய் தரித்துக்கொள்வார். பரீட்சைக் காலங்களில் டீ, பொடி முதலிய சாதனங்களின் உதவியால் இரவு பூராவும் கண்விழித்துப் படிக்கும் சில பள்ளி மாணவர்களைப்போல, பானை நிறையக் காப்பியும், பத்துப் பன்னிரண்டு மெழுகு வர்த்திகளும் வைத்துக்கொண்டு இரவு முழுவதும் எழுதுவார்.

போலந்தின் மாஜி பிரதம மந்திரிகளில் ஒருவரும், பியானோ வாசிப்பதில் மகா கியாதி வாய்ந்தவருமான பாடே ரெவ்ஸ்கீ என்பவர், பியானோ வாசிக்க உட்காரு கையில் ஐந்து நிமிஷ நேரம் வரையில், தமது ஆசனத்தை ரொம்ப ஒழுங்கெல்லாம் பார்த்துத்தான் போட்டுக் கொள்வார். பிறகு, தமது சிறிய பீடத்துக்கு அருகே அந்தப் பெரிய பியானோவை இழுத்துப் போடச் சொல்வாரே யொழிய, தமது பீடத்தைச் சிறிதுகூட நகர்த்த மாட்டார்.

புலவர்கள்தாம் இவ்வாறென்ருல் அரசர்கள், பிரபுக்களின் வாழ்க்கையிலும் இம்மாதிரியான சில விநோதங்கள் இல்லாமலில்லை. ஒளரங்கசீப்பிற்குச் சங்கீதத்தைக் கேட்கப் பிடிக்காதது போலவே, இங்கிலாந்தை அரசாண்ட இரண்டாவது ஹென்றிக்கும், பூனைகளைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. பிடிக்காததோடல்ல, ஒரு பூனையைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் மூர்ச்சையடைந்து விழுந்துவிடுவார். இவ்வாறு பல தடவை அவர் மூர்ச்சை போட்டிருக்கிறார்.

பிரடரிக் என்னும் கீர்த்திபெற்ற மன்னர், இதற்கு நேர் விரோதமானவர். அவருக்குப் பூனையைக் கண்