பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வாழ்க்கை விநோதம்

டால் மிகப் பிரியம். ஆனால், வெப்பம் சிறிதும் பிடிக்காது. இரவு நேரங்களில், கொஞ்சம் வெப்பமாகத் தோன்றினாலும் சரி, உடனே தமது வேலையாட்களை அழைத்து, தண்ணீர் கொண்டுவந்து, தமது தலையில் கொட்டும்படி கட்டளையிடுவார். இவ்வாறு செய்யாவிடில் அவருக்குத் தூக்கமே வராது.

நியூயார்க்கைச் சேர்ந்த வென்டல் என்பவர் ஒரு கோடீசுவரர். அவருக்குக் கறுப்பு உடைகள் போட்டுக் கொள்வதில்தான் பிரியம் அதிகம். அதுவும் ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள கறுப்பு ஆடுகளின் தோலால் செய்த உடைகளாகத்தாம் இருக்கவேண்டும். கோடை காலங்களில் தமது குல்லாய்களுக்கு ‘எனாமல்’ பூசிவிடுவார். அழைப்புக்கள் எல்லாவற்றையும் அவர் லத்தீன் பாஷையில்தான் எழுவது வழக்கம். நமது சமஸ்கிருதம் போல் வழக்கொழிந்தது லத்தீன் பாஷை என்றாலும் , அதைவிட்டு வேறு எந்தப் பாஷையிலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அழைப்புக்களை அவர் எழுதவே மாட்டார். அவருடைய மிதியடியின் கீழே, ஓர் அங்குல கனமுள்ள தோல்வைத்துத் தைத்திருக்கும். உயர மாகத் தோன்றுவதற்காக அன்று. எல்லா வியாதிகளுமே கால்வழியாகத்தான், உ ட ம் பி ற்கு ள் நுழைகின்றன என்பது அவருடைய சித்தாந்தம். ஆகையால், அதைத் தடுக்கவே இந்த முன் ஜாக்கிரதையான ஓர் அங்குலத் தோல்.

இதை யெல்லாம் பார்க்கும்போது, எப்படி நோய் பிடித்த சிப்பியிலேயே நல்ல முத்துப் பிறக்கிறதோ அதேபோல, ஏதோ ஒரு மன நோயின் வேரினின்றே, மனித மேதையும் கிளைத்துத் தளிர்த்துப் பூக்கிறது என்று ஸ்டுவர்ட் ராபர்ட்ஸன் என்ற ஆங்கில எழுத்தாளர் வியப்பதில் உண்மை யிருக்குமென்றே தோன்றுகிறது