பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு


மேடைமீது ஏறிப் பிரசங்க மாரி பொழிபவர்களைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒர் ஆசை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவர்கள் மேலல்ல.! அவர்கள் மாதிரி நானும் மேடைமீது ஏறிப் பேச வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த ஆசை ஏற்பட்டதோடு நின்றதா ? வளரவும் ஆரம்பித்து விட்டது! எவ்வளவோ அடக்கி அடக்கித்தான் பார்த்தேன். ஆனால் அந்த ஆசையை அடக்கவே முடியவில்லை. `ஸ்பிரிங்கை எவ்வளவுக் கெவ்வளவு கீழ் நோக்கி அழுத்துகிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு தானே மேலே தூக்கி அடிக்க ஆரம்பிக்கிறது ? அது போலவே பீரிக்கொண்டு வந்துவிடும்போல ஆகி விட்டது. இதற்கு ஒரு சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

நல்லவேளையில், எங்கள் சங்கத்தின் ஆண்டு விழா வந்தது. அந்தச் சங்கத்தில் எனக்குக் காரியதரிசி உத்தியோகம். (கெளரவ உத்தியோகந்தான். சம்பளமில்லை.) ஆண்டு விழாவில் பெரிய பெரிய பிரசங்கிக