பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

45


ஆனாலும், ஆண்டு விழாவில் இதற்காகவா அழுது கொண்டேயிருப்பது? காரியதரிசியின் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

சிலர் பேசி முடித்தார்கள். கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர், திடீரென்று, என் பெயரைச் சொல்லி என்னைப் பேசும்படி பணித்தார்.

இதைக் கேட்டதும், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என் பெயரைத்தான் அடித்துவிடடதாகச் சொன்னார்களே! அப்புறம் எப்படி என்னைத் தலைவர் கூப்பிட்டார்?

ஆனாலும், இதைப் பற்றி அப்பொழுது யோசிப்பதில் பயனில்லை என்று தலைவர் கட்டளைப்படி பேச மேடைக்கு வந்துவிட்டேன். உடனே சங்கத் தலைவரும், கூட்டத் தலைவரின் பக்கத்தில் வந்து, “அடடா, இவர், பேச சந்தர்ப்பம் இல்லை என்றார். இவர் பெயரை அடிப்பதற்குப் பதில், மேலே உள்ளவரின் பெயரையல்லவா அடித்துவிட்டோம், அவசரத்தில்!” என்று சொன்னது காதில் விழுந்தது.

ஆனாலும், கூட்டத் தலைவர், “பரவாயில்லை. இவரே தாம் மேடைக்கு வந்துவிட்டாரே” என்று அவர் காதுக்குள் பதில் சொல்லிவிட்டார்.

நான் மேடைமீது ஏறியதும், சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்துச் சந்தோஷப்பட்டேன் என்றா நினைக்கிறீர்கள்? அதுதானில்லை. சந்தோஷம் வரவேமாட்டேன் என்று மறுத்துவிட்டது. கைகள், கால்கள் எல்லாம், கையும் களவுமாக அகப்பட்ட திருடனுடை யவை போல ‘கிடு, கிடு’ என்று ஆட ஆரம்பித்துவிட்டன; மேலெல்லாம் வியர்த்துவிட்டது. இவ்வளவு சிரமப்பட்டும், வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளியே வர