பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வாழ்க்கை விநோதம்

வில்லை. சோடாப் புட்டியில் குண்டு அடைத்துக்கொள் வதுபோல, தொண்டையை ஏதோ அடைத்துவிட்டது. தொண்டையைக் கனைத்துக் கனைத்துப் பார்த்தேன். கடைசியாக, கண்மூடி போட்ட குதிரையைப் போல நேரே பார்த்துக்கொண்டே நாலைந்து வார்த்தைகளைச் சிரமப்பட்டு, வெளியே கொண்டுவந்தேன். அவைகளிலும் சில பாதியோடு நின்றுவிட்டன; சில திருப்பித் திருப்பி வந்துவிட்டன.

ஒரு வழியாக எனது சிற்றுரையை முடித்துக் கொண்டேன். கீழே வந்து உட்கார்ந்துங்கூட விடாமல் சுமார் ஒரு மணி நேரம் வரை என் கை கால் ஆட்டம் நின்றபாடில்லை.

இந்த மாதிரி, நாலுபேருக்கு நடுவில் என்னை மேடைமீது நிற்கவைத்து அவமானம் செய்த தலைவர் மீது, எனக்குக் கோபம் வராமல் இருக்க முடியுமா? நிகழ்ச்சியில் முன் இருந்தபடியே இருந்திருந்தாலாவது தமிழ்ப் பண்டிதரிடம் ஏற்கெனவே எழுதி வாங்கி வைத்திருந்த விஷயத்தை, மனப்பாடம் செய்து தைரியமாக, கைகால் அசையாது, ஒப்பித்திருக்கமாட்டேனா? இப் படித் திடீரென்று பேசச் சொன்னால் எப்படிப் பேசுவது? இதுதான் என்னுடைய பேச்சு மட்டமாகப் போனதற்கு முதல் காரணம்; முக்கிய காரணமும் அது தான். இல்லாவிட்டால் அந்தத் தமிழ்ப் பண்டிதருடைய நடையும், கருத்தும் எப்படி இருக்கும் தெரியுமா!

இதிலிருந்து நான் எங்களூரில் பேசுவதே இல்லை. காரணம், என்னை யாரும் பேசுவதற்கு அழைக்கவில்லை என்பதுதான்.

இந்தச் சம்பவத்தால் நான் மனம் உடைந்துவிட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லோரும் எடுத்த