பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

31

வுடனேயே ஜவாஹர்லாலைப்[ போல நன்றாகப் பேசிவிட முடியுமா? அப்படியே பேசிவிட்டாலும்தான் ஸர். சாப்ரு போன்ற ஒருவர் வந்து, நம்முடைய பேச்சைப் போற்றித் தட்டிக் கொடுத்து, முத்தமும் கொடுப்பார் என்று எதிர் பார்க்க முடியுமா?

சர்ச்சில் துரை, பார்லிமெண்டில் அங்கத்தினரான புதிது. அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தாராம். சர்ச்சிலின் அறை சாத்தப்பட்டிருந்தது. சர்ச்சில் வீட்டில் இல்லை என்று நினைத்து, நண்பர் திரும்பிப் போக ஆரம்பித்தார். அப்பொழுது சர்ச்சிலினுடைய அறையிலிருந்து ஒரு குரல் கிளம்பியது! அந்தக் குரல் இந்த நண்பரைக் கூப்பிடவில்லை. பின்னர் என்ன செய்தது தெரியுமா?

“நான், இந்தப் பார்லிமெண்டுக்குள் நுழையும் போது உங்கள் முன் பேசப்போகின்றேன் என்று நினைக்கவேயில்லை, ஆனால் ......” என்றுதான் ‘நெட்டுரு’ச் செய்துகொண்டிருந்ததாம்!

“சந்தேகமில்லை, இது சர்ச்சிலின் குரல்தான்” என்று நண்பர் கண்டுகொண்டாராம். அது ஒரு காலம். ஆனல், பிற்காலத்தில், பேச்சிலே பெரிய சூரர் எனப் பெயரெடுத்துவிட்டார்.

இந்த மாதிரி, பெரிய பேச்சாளர்களில் எத்தனை பேர் ஆரம்ப காலத்தில் இருந்திருப்பார்கள்! சிலர், கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிப் பழகி இருக்கலாம். சிலர் தாமே எழுதிப் படித்துவிட்டு, கூட்டத்தில் ஒப்பித்திருக்கலாம். இன்னும் சிலர், என்னைப்போல யாரிடமாவது எழுதி வாங்கி, மனப்பாடம் செய்திருக்கலாம். அல்லது, அந்தக் காலத்துப் பத்திரிகைகளில் வந்த, தலைவர்களின் பேச்சுக்களைப் படித்துவிட்டு, பேசும்போது