பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவைகளை வலிந்து புகுத்தியாவது தமது பிரசங்கத்தைப் பெருமைப்படுத்தியிருக்கலாம்.

சிலர், சாதாரணக் கூட்டத்தில், சண்டமாருதமாகப் பேசுவார்கள். ஆனல் பெரிய கூட்டத்தைக் கண்டால், பேசவரவே வராது. வேறு சிலர், சாதாரணத் தலைவராக இருந்தால் வெகு ஜோராக வெளுத்து வாங்குவார்கள். மிகப் பெரிய மனிதர் தலைவராக இருந்துவிட்டால், நாக்கு எழவே எழாது.

‘பேச்சுப் பேச்சென்னும், பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக் கீச்சென்னும் கிளி’

என்பார்களே, அது போலத்தான்!

ஊரில், கொஞ்சம் பெரிய மனிதராக இருப்பார் ஒருவர். அந்த ஊரிலே, `பாரதி விழா' கொண்டாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவரைப் பேசும்படி கேட்டுக்கொண் டிருக்கமாட்டார்கள். இருந்தாலும், அவர் பாரதியாரைப் பற்றி, ஏதேதோ எழுதிச் சேர்த்துப் பாடம் செய்துகொண்டு கூட்டத்திலும் ஆஜராகிவிடுவார்.

“பெரிய மனிதர் வந்துவிட்டாரே, பேசச் சொல்லாமல் என்ன செய்வது?” என்று அவரைப் பேசும்படியாகத் தலைவர் கேட்டுக்கொள்வார். அவரும் எழுந்திருந்து, கூட்டத்தாரைப் பார்த்து, “நானும், உங்களைப் போலப் பிரசங்கம் கேட்டுவிட்டுப் போகத்தான் வந்தேன். ஆனால் தலைவரவர்கள் என்னைப் பேசும்படி கட்டளையிட்டுவிட்டார்கள்” என்று சொல்லிவிட்டு ஏற்கெனவே படித்து வைத்திருந்த `தயார்ப் பாடத்'தை நாசுக்காக ஒப்பிக்க ஆரம்பித்துவிடுவார்.

சிலர், பேசுவது கூட்டத்தாருக்குப் பிடிக்காது. இந்த அதிருப்தியை, அவர்கள் எழுந்துபோவதிலும்