பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

49


சத்தம் போடுவதிலும் காண்பிப்பார்கள். பிரசங்கியார், இதைப் புரிந்துகொள்ளாது, மேலும் பேச ஆரம்பித்து விடுவார். சிலர் உடனே கைதட்டுவார்கள். நல்லது, கெட்டது இரண்டுக்குமே கைதட்டுவதால், பிரசங்கியார், தம்மை உற்சாகப்படுத்துகிறார்களாக்கும் என்று நினைத்து, மேலும் விஸ்தாரமாகப் பேசிக்கொண்டேயிருப்பார். கடைசியில் ‘உஸ், உஸ்’ என்று கூட்டத்தில் சப்தம் எழுந்தவுடனேதான், பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.

இந்தமாதிரி, இன்னும் எவ்வளவோ கஷ்டங்கள். இவைகளெல்லாம் சகஜந்தான். இதற்காகப் பயந்து என்னைப் போன்றவர்கள் பேசாமலேயே இருந்துவிட முடியுமா? பேசிப் பேசிப் பழகினால், தானாகவே பேச வந்துவிடுகிறது. ஏன், ஒரு காலத்தில் நான் பெரிய பிரசங்கியாகக்கூடாதா என்ன?

முதல்தடவை, கோர்ட்டில் ஆஜராகும்போது திணறிப்போன மகாத்மா காந்திதானே, பிற்காலத்தில் உலகக் கோர்ட்டில், இந்தியா தரப்பில் ஆஜராகி வாதாடி வெற்றியும் பெற்றார்!