பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரிக்கார்


கரியால் வாழ்ந்து, ஜனங்களை ஏற்றிக்கொண்டு, நான்கு சக்கரங்களுடன் செல்லும் ஓர் உருவம் கரிக்கார் என்பது உலகறிந்த விஷயம். இந்தக் கார்கள் அதிக மாக உற்பத்தியானதற்குக் காரணம் ஹிட்லர்தான் என்றால் பொய்யாகாது.

“என்ன ஐயா, ஹிட்லர் கரிக்கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்து, அதில் இவைகளை உற்பத்தி செய்தாரா?” என்று யாரும் என்னிடம் கேட்கமாட்டார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், கரிக் கார்கள் எதனால் பெருகின? யுத்தம் வந்ததனால். யுத்தம் எதனால் வந்தது? ஹிட்லரால்தானே? இதன் விளைவால் அழகிய கார்களும் கூட, பின்னல் கரி எரியும் குழாயுடனும், தலையில் கரி மூட்டைகளுடனும் காட்சி அளிக்க ஆரம்பித்தன.

கார்கள் நமது நாட்டிற்கு வந்த புதிதில் அவற்றை ஒட்டும் டிரைவர்களுக்கு அதிக மரியாதை இருந்ததாம். கமர்ஷியல் டாக்ஸ் ஆபீஸருக்குக்கூட யுத்தகாலத்தில் கடைக்காரர்கள் அவ்வளவு மதிப்புக் கொடுக்கமாட்டார்களாம். பல வீடுகளில், கார்களுக்குச் சொந்தக்காரர்கள் கூடப் பின்புதான் சாப்பிடுவார்களாம். ஆனால் டிரைவர்களுக்குத்தான் முதல் பந்தியாம்! பழைய காற்றைத்