பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரிக்கார்

31

திறந்துவிட்டுப் புதுக் காற்று அடைக்கவேண்டும் என்று கூறி, முதலாளிகளிடம், சில டிரைவர்கள் பணம் பெற்றதாகக்கூடக் கேள்வி !

ஆனால், கரிக்காரால், அந்த டிரைவர்களும், கண்டக்டர்களும் படும்பாட்டைப் பார்த்தால், உண்மையிலேயே வருந்தாமல் இருக்க முடியவில்லை. அவர்கள், கரியைக் குழாயில் போடுவதையும், தீப்பற்ற வைப்பதையும், விளையாட்டுப் பொம்மைகளுக்குச் சாவி கொடுப்பது போல் பின்னால் இருக்கும் கைப்பிடியைச் சுற்றுவதையும் கண்டால், கண்ணிர் வருகிறது.

ஆனால், இந்தக் கார்கள் அவர்களுடைய பிராணனை வாங்குவதோடு நிற்கவில்லை. பிரயாணிகள் பிராணனையும் சேர்த்து வாங்குகின்றன.

பிரயாணம் செய்யும்போது, கணப்புச் சட்டிக்குப் பக்கத்தில் இருப்பதுபோல இருக்கிறது. மழைக்காலத்திலாவது பரவாயில்லை. ஆனால் வெய்யில் காலத்திலோ, உஷ்ணம் தாங்காது.

முன்பிருந்த பெட்ரோல் வண்டிகளில் சில புறப்படமாட்டா; புறப்பட்டால் நிற்கமாட்டா! ஆனால், இந்தக் கரிக்கார்களோ, நிற்க வேண்டிய இடங்களில் மட்டுமல்ல; எந்த இடத்திலும், எந்தச் சமயத்திலும் நின்று விடுகின்றன. “வேலை நிறுத்தம் செய்பவர்கள் முன்னதாகவே அறிவிக்கவேண்டும். இல்லையேல் பாதுகாப்புச் சட்டப்படி தண்டனைக்குள்ளாவார்கள்” என்ற சட்டத்தை இந்தக் கார்கள், பிரயாணிகள் பேசும்போதுகூடக் கேட்டதில்லை போலும் !

மேடுகளைக் கண்டால், மூச்சுத் திணற ஆரம்பித்து விடும். அப்பொழுதெல்லாம் பிரயாணிகளுக்கு அஸ்தியிலே ஜூரம்தான். எங்கேயாகிலும் இறங்கித் தள்ள