பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வாழ்க்கை விநோதம்


வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுமோ என்ற பயம். வேகத்திலோ கேட்க வேண்டியதில்லை. எதிரே வரும் ஆட்கள், வண்டிகள் - ஏன்?--கார்களைக்கூட `ஸைடு' வாங்கிவிடுகின்றன என்றால் பாருங்களேன்! மண் குதிரையை நம்பி ஆற்றிலே போகிறவனையும் கரிக்காரை நம்பி அவசர வேலையாகப் போகிறவனையும் ஒரே ரகத்தில் சேர்க்கலாம்.

சென்னை மாநகரத்திலே, கரிக்காரால் கஷ்டப் பட்டவர் அநேகர். அநேகமாக, எல்லோரும் இந்தக் கரிக்கார் தள்ளும் வைபவத்திலே கலந்துகொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் இந்த அநுபவம் ஏற்பட்டிருப்பினும், எனது அநுபவத்தைக் கேட்க வேண்டாமா?

ஒரு நாள், கரிக்காரில் மைலாப்பூர் போவது என்று தீர்மானித்தேன். அங்கு ஒரு நண்பர் வீட்டில் விருந்து என்றால் அவசர வேலைதானே! ஆனால், வெகு நேரம் நான் நின்றும், காரில் இடம் கிடைக்கவில்லை. கூட்டம் அதிகம். அதில் முண்டியடித்து ஏற முடியவில்லை. சில பயில்வான்கள் மட்டும், எல்லோருக்கும் முன்னால் ஏறி விட்டனர். உடலில் பலம் இல்லாததால் அகிம்சையே நல்லது என்று சொல்லிக்கொள்ளும், என்னைப்போன்ற சில தீவிர அகிம்சா வசதிகள், இடம் கிடைக்காது தவித்து நின்றோம்.

இந்த அவசரத்தில் ஒருவர் காரில் ஏறுவதற்கு முன்னால், அவரது பூட்ஸ் காலை எனது கால்மேல் ஏற்றி விட்டார். வலி பொறுக்க முடியவில்லை. “சார் கால், கால்,” என்று கத்தினேன். உடனே அவர் காலை எடுத்துக் கொண்டு, “சாரி, சாரி (sorry)” என்றார். நானும், “பரவாயில்லை, பரவாயில்லை என்று சொல்லிக்கொண்டே, காலைத் தடவிக்கொண்டு, அந்தக் காரில் ஏறும் முயற்