பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரிக்கார்

53

சியை விட்டுவிட்டு, கண்ணிர் கலங்கும் கண்களால், மறு காரை எதிர்பார்த்துக்கொண்டு நின்றேன்.

எத்தனையோ கார்கள் வந்தன; சென்றன. ஆளுல் நான்மட்டும், நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தேன். வெகுநேரத்துக்கு அப்புறம், ஒரு கார் வந்தது. பிரம்மப்பிரயத்தனப்பட்டு அதில் ஏறிவிட்டேன்! நிற்கத்தான் இடம் கிடைத்தது.

அந்தக் காரில் இருந்த கண்டக்டர், ஹாஸ்யமாகப் பேசும் சுபாவம் உடையவர் போலக் காணப்பட்டார். ஒவ் வொருவரிடமும், அவர் வேடிக்கையாகவே பேசிக் கொண்டு வந்தார்.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இறங்கு பவர், “ராயப்பேட்டை ஆஸ்பத்திரி” என்றும், போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இறங்குபவர், “போலீஸ் ஸ்டேஷன்” என்றும் கூறி டிக்கெட்டுக்குப் பணம் கொடுத்தனர். உடனே, அந்தக் கண்டக்டர், டிக்கெட் டைக் கொடுத்துவிட்டு, ஆஸ்பத்திரிக்கு என்றவரை, “ஏன் சார், யாராவது உடம்பு சரியில்லாது ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களா?” என்றும், போலீஸ் ஸ்டேஷனுக்கு என்றவரை, “என்ன சார், யார் மேலே கம்ப்ளயின்ட் கொடுக்கப் போறீங்க? இனிமேல் அதிகமாக ஏத்தலிங்க, மன்னிச்சுக்க மாட்டீங்களா?” என்றும் வேடிக்கையாகக் கேட்டார். “மைலாப்பூர் குளத்திற்கு” என்று சொல்லி, டிக்கெட் கேட்டார் வேறு ஒருவர். உடனே கண்டக்டர் ஏன் சார், குளத்திலேயா இறங்கிறீங்க?" என்று கேட்டார். யாவரும் சிரித்தோம்.

நானும் மைலாப்பூர் குளத்தின் அருகேயே இறங்க வேண்டி யிருந்தது. கார் போய்க் கடைசியாக நிற்கும் இடமும் குளமும் ஒன்றாக இருந்ததால், கண்டக்டரைப்