பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வாழ்க்கை விநோதம்


பார்த்து, “அப்பா, இதுபோய், நிற்கும் இடத்துக்கு ஒரு டிக்கெட் கொடு' என்று, சாமார்த்தியமாகக் கூறிவிட்ட தாக நினைத்துப் பணத்தை நீட்டினேன். ஆனல் அந்தக் கண்டக்டரோ, சார், இது கரிக்காராக்கும். எந்த இடத்திலும், எந்தச் சமயத்திலும் நிற்கும்” என்று கூறி, ஆனால், சரியாகவே டிக்கெட்டைத் தந்தார்.

நின்றுகொண்டிருந்ததால், கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. சினிமாவில், கதாநாயகன் தூக்கு மேடையில் நிற்பது போல, இருபுறமும் இருக்கும் கைப்பிடி வாரைப் பிடித்தவாறே நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. குறைந்த சார்ஜ் கொடுத்து, யார் டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள் என்று பார்த்து, அவர் பக்கம் போய் நின்று கொண்டேன். ஏனென்றால், அவர் சீக்கிரம் இறங்கிவிடுவார்; அந்த இடத்தை நான் கைப்பற்றிக்கொள்ளலா மல்லவா ?

சிறிது நேரத்திலேயே என் எண்ணம் பலித்தது. உட்கார்ந்துகொள்ளும் பாக்கியம் பெற்றேன். சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு ஒர் எல்லே வந்துவிட்டது. அதுதான், அந்தக் கரிக்கார் நின்று கொண்ட இடம்; எனது சந்தோஷத்தைத் தாங்க முடியாதுதான் அது நின்றுவிட்டது என்று எண்ணுவதற்குப் போதிய ஆதாரம் இல்லை.

உடனே கண்டக்டர், “சார், கொஞ்சம் இறங்குங்க” என்றார். “தனனனன' என்று இழுப்பதுவே, பாடப் போவதற்கு அறிகுறிதானே. “சரி, இனித் தள்ளச்சொல்லத்தான் போகிறார்” என்று நினைத்தேன். அவரும் அப்படியே, “சார், எல்லோரும் கொஞ்சம் கை கொடுங்கோ” என்றார் சுற்றுமுற்றும் பார்த்தேன். இருட்டு நேரம்;