பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரிக்கார்

55


அத்துடன் யாரும் தெரிந்தவர்கள் இல்லை. எல்லோ ரோடும் சேர்ந்து பலமாகத் தள்ளினேன்.

கார் வெகு நேரத்துக்கு அப்பால்தான் புறப் பட்டது. சேரவேண்டிய இடத்தை அடைந்தேன். ஆனல் எல்லோரும் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கி, மூச்சுவிடும் சப்தம் கேட்டது. என்ன செய்வது ? அவர் களை எழுப்பி, வேறு இடத்தில் சாப்பிட்டுவிட்டதாகச் சமாதானம் கூறி, அவர்களுடன் தூக்கத்தில் கலந்து கொண்டேன். எல்லாம் கரிக்கார் செய்த வேலை யல்லவா ?

எடுத்ததற்கெல்லாம் கவிபாடும் காளமேகப்புலவர் மட்டும் இருந்திருந்தால், நிச்சயம் அவர் இந்தக் கரிக்கார் மேலே பாடாமல் இருக்கமாட்டார்.

"கார்என்று பேர்படைத்தாய்,
கரியாலே வாழ்கின்றாய்,
சேரிடம் அறிந்து சேர்க்காய்,
`சிக்கிரம்' உணர மாட்டாய்,
தார்ரோட்டில் நின்று கொண்டு,
தள்ளிட வழியும் வைத்தாய்.
பாரினில் யாரிடம் போய்ப்
பட்டஎன் அவஸ்தை சொல்வேன்!”

இதுமாதிரி அவர் பாடலாம். ஏன்? இதைவிட நன்றாககக் கூடப் பாடலாம். யுத்த காலத்தில் அவர் இருந்தால் இது ஒன்றைப் பற்றி மட்டுந்தான பாடுவார்? உலகில் நடக்கும் ஒவ்வொரு விபரீதத்தையும் பற்றி, ஒவ்வொரு பாட்டுப்பாடி எழுதிக் குவித்துத் தள்ளியிருக்க மாட்டாரா ?

ஆனால், ரேஷன் அரிசியைச் சாப்பிடுவதற்கும், மண்ணெண்ணெய்க் கடையில் புட்டியோடு நின்று இடிபடுவதற்கும், விறகுக் கடையில் விளக்கு வைக்கும் வரை காத்திருப்பதற்கும் கொடுத்துவைக்க வேண்டாமா?