பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரியில்லா வருமானம்

57


அதிகாரியைப் பார்ப்பதற்குக்கூடப் பணம். சுவாமி தரிசனத்துக்குக் கூட, இரண்டணா நாலணாதான். ஆணால் அதிகாரியைப் பார்க்கவோ எட்டணா!

ஒரு பெரிய கம்பெனி. அங்கு இருக்கும் சாமான்களைச் சுலபமாகப் பெறுவது கடினம். ஆனல், சாமான்கள் வியாபாரம் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. நேரான வழியில் செல்பவர்களுக்கு அல்ல ; சுற்றுப் பாதையில் வருவோர்களுக்கே கிடைக்கின்றன.

அதன் மானேஜர் வீட்டின் முகப்பில், முன்பெல்லாம் பெரிய நாய் ஒன்று கட்டிக் கிடக்கும். கரடி போன்ற உருவம். நிறமும் அப்படியே. இப்பொழுது, அந்த நாயை அங்குக் காணோம்! காரணம், யுத்தத்துக்கு முன்னால், அவருக்குக் கடன் அதிகமாக இருந்ததாம். அதனால் கடன்காரர் தொந்தரவும் அதிகம். வீட்டுக்குள் யாராவது நுழைந்தால், நாய் குரைக்க ஆரம்பித்துவிடும். (சில சமயங்களில் கடித்துவிடுவதும் உண்டாம்!) ஆகையால் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கே அஞ்சி, வந்த வழியே திரும்பிவிடுவார்களாம். ஆனால், யுத்தம் வந்த பிறகோ, அந்த நாய் அங்கே இருப்பது.தொந்தரவாய்ப்போய்விட்டதாம். ஏனென்றால், காகிதக் கூட்டுக்குள் ஐம்பது, நூறு என்று வைத்து, வீடு தேடி ரகசியமாகக் கொடுக்க வருபவர்களுக்கு, உபசரணை செய்ய வேண்டாமா? அதனால்தான், நாய்க்கு அங்கே வேலை இல்லை !

புதிதாக உத்தியோகம் பெற்ற ஒருவரிடம் லஞ்சம் கொடுக்க ஒருவன் வந்தான். அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். வந்தவன் ஏமாற்றத்துடன் போய் விட்டான். அவன் தலை மறைந்தவுடன், அந்த ஆபீஸிலுள்ள சகோரக் குமாஸ்தாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து