பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வாழ்க்கை விநோதம்


லஞ்சத்தை மறுத்த குமாஸ்தாவை `கிடுக்கித் தாக்குதல்' செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

‘என்னங்காணும், கொண்டுவந்து ஒரு மனுஷன் கொடுக்கிறான். வேண்டாம் என்று சொல்லிவிட்டீரே! ரொம்ப அழகாயிருக்கிறது. பரம்பரையாய் நடந்து வருவதை வீணாய்க் கெடுக்கப் பார்க்கிறீரே! எங்கள் பிழைப்பிலெல்லாம் மண்ணைப்போடத் தீர்மானித்துவிட்டீரோ ?’ என்று சரமாரியாகப் பொழிந் துவிட்டார்களாம்.

இந்த நிகழ்ச்சியை அந்த லஞ்சம் வாங்காதவர், தமது நண்பர் ஒருவரிடம் கூறினார்.

இதைக் கேட்ட அவரது நண்பர், “அப்படித்தானப்பா இருக்க வேண்டும். நீ ரொம்ப நல்லவனப்பா” என்று மெச்சினார்.

ஆனால், அதற்குள் அவர், “நான் என்ன செய்வது? உத்தியோகம் ஆகி இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள்ளேயா லஞ்சம் வாங்குவது? இன்னும் கொஞ்ச நாளாகட்டும் என்று இருந்தேன். அதற்குள்ளேயே இந்தப் பயல்கள், இப்படி எரிந்து விழுகிறான்களே!” என்று வருத்தப்பட்டாராம் !

***

ஒரு பத்திரிகை சம்மந்தமான வேலை ஒன்று, நடக்க வேண்டியதிருந்தது. பத்திரிகை மானேஜர், அந்த வேலையை முடிப்பதற்கு உதவி செய்யும்படியாக, அது சம்மந்தமான உத்தியோகஸ்தரைக் கேட்டுக்கொண்டார். அவரும் முடித்துத் தருவதாக வாயளவில் சொன்னாரே தவிர, செய்கையில் காட்டாதிருந்தார்.

வாய்ப் பேச்சில் மசியமாட்டார் போல் தோன்றியதால், பத்திரிகை மானேஜர், தம் கையில் வைத்திருந்த பத்திரிகையை, அவர் கண்ணுக்குத் தெரியும்படி புரட்டிக்