பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டெலிபோன் ஏமாற்றம்



“ட்ரிண், ட்ரிண், ட்ரிண்ண்......”

கடியாரமல்ல, டெலிபோன்தான் இப்படிச் சப்தம் போடுகிறது.

மத்தியானம் மணி ஒன்றரை யானதால், யாருமே ஆபீஸில் இல்லை. டிபனுக்குப் போய்விட்டார்கள். மானேஜருக்கு டிபன் கொண்டுவந்த துரைசாமிமட்டுமே நின்றுகொண்டிருந்தான். டெலிபோன் சத்தம் போடுவதைக் கண்டதும் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை. டெலிபோனில் பேசவேண்டுமென்ற நீண்ட நாள் ஆசையைத் தீர்த்துக்கொள்ள நினைத்தான். டெலி போனைப்பற்றிப் பூரணமாகத் தெரியாவிட்டாலும், தைரியமாக டெலிபோனை எடுத்தான்; பேச ஆரம்பித்து விட்டது.

“ஹல்லோ.”

“யாருங்க ?”

“ஹல்லோ, யார் பேசுகிறது ?”

“ஏங்க, நான்தானுங்க.”

“நான் என்றால் யார் ?”

“நான்தானுங்க, தெரியல்லியா ?”

“அட நான்தான், என்றால் யார்? பெயர் இல்லையா?”