பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டெலிபோன் ஏமாற்றம்

63


“என்னங்க, இன்னம் தெரிஞ்சுக்கல்லீங்களா ? இவ்வளவு வருசமா, எங்க எசமாங்கிட்டே இருக்கேன். துரைசாமிதானுங்க.”

“நல்ல வேளை, உன் பெயரையும், உத்தியோகத்தையும் முதலிலேயே சொல்லப்படாதா? சரி, எங்கே மானேஜர்?"

“எங்க எசமாந்தானேங்க. அவரு எங்கோயோ போயிட்டாருங்க. பன்னெண்டு மணிக்கே டிபன்கொண்டாந்தேனுங்க, இன்னங் காணுமே! எங்கே போயிருப்பாக ?”

“சரி, சரி, வேறே யாரும் இல்லையா? இருந்தால், மர்க்கண்டைல் பேங்கிலிருந்து கூப்பிடுவதாகச் சொல்லு.”

துரைசாமி, ஆபீஸ் பூராவும் தேடுகிறான், யாரையும் காணோம். மாடியில் யாராவது இருக்கிறார்களா என்று மேலே செல்கிறான். அங்கே, ஏதோ பழைய குப்பைகளைக் கிளறிக்கொண்டிருக்கிருர், குமாஸ்தா ஒருவர். முக்கியமான கடிதம் ஒன்று காணாததால், மானேஜர் உத்தரவுப்படி, அதைத் தேடுவதில் முனைந்திருக்கிறார். அவரிடம் துரைசாமி சென்று, “ஐயா, யாரோ போனில் கூப்பிடுறாங்களே" என்றான்.

“யாரடா ? பெயர் தெரியுமா ?”

“சொன்னாங்க, ஏதோ மார்க்கண்டேயனோ என்ன வோவ்னாங்களே!”

“சரி, இதோ வந்தாச்சு.”

குமாஸ்தா, டிபன்கூடச் சாப்பிடாது வேலை பார்க்கிறார். இந்தமாதிரி குறுக்கே வந்தால் வயிற்றெரிச்சலாகத்தானே இருக்கும்? யாரும் இல்லையென்று சொல்லி விடும்படி துரைசாமியிடம் சொல்லி இருக்கலாம். ஆளுல் முக்கியமான விஷயமாக இருந்தால், என்ன செய்வது?