பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வாழ்க்கை விநோதம்


முகத்தைச் சுளித்துக்கொண்டே, குமாஸ்தா கீழே அவசர, அவசரமாக வருகிறார், போனிடம் செல்கிறார்.

போன் இருந்தபடியே இருக்கிறது ; அதாவது ‘ரிஸீவர்’ போன் மேலேயே இருக்கிறது. துரைசாமி அதைக் கீழே வைத்துவிட்டு வந்திருந்தாலல்லவா பேசலாம்? குமாஸ்தாவிற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

“என்னடா, என் வேலையையெல்லாம் குட்டிச் சுவராக்கிவிட்டாயே! போனை இப்படி வைத்துவிட்டு வந்து, என் கழுத்தை அறுக்கிறாயே” என்றார்.

“பின்னே என்னங்க பண்ணுவது! போனை எடுத்துக்கிட்டே வந்திருக்கணுமா? அதை ஆணி அடிச்சல்ல வச்சிருக்குப் போலேருக்கு” என்று களங்கம் இல்லாமல் பதில் சொன்னான்.

இதைக் கேட்டவுடனே, குமாஸ்தாவுக்குக் கோபம் வந்தாலும், சிரிப்புத் தடுத்துவிட்டது. பேசாமல் மாடிக்குப் போய்விட்டார்.

***

ஆபீஸ் மானேஜர் முதலாளி வீட்டுக்குப் போன் பண்ணினார்.

“ஹல்லோ......”

“ஹல்லோ......”

“ஹல்லோ. ஆபீஸிலிருந்து பரமானந்தம் பேசுகிறேன். நமஸ்காரம் சார். இன்றைக்கு அவசர வேலையாக வீட்டுக்குப் போகணும். அதான், உங்ககிட்டே சொல் லிட்டுப் போகலாம்ணு பார்த்தேன். மன்னிச்சுக்கணும். அவசர வேலை...அதான்......”