பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டெலிபோன் ஏமாற்றம்

65


“ஹல்லோ, யார் முதலாளியா வேணும்? அவர் வெளியே போய்விட்டாரே.”

“பின்னே யார் பேசுகிறது ?”

“நான்தான், பியூன் வெங்கடாசலம், சார்”

இதைக் கேட்டதும் மானேஜருக்கு வெட்கமாகப் போய்விட்டது டபக்கென்று போனை வைத்துவிட்டார்.

***

தியாகராஜன், தன் நண்பன் சோமசுந்தரத்துக்கு, அவன் வேலைபார்க்கும் ஆபீஸிற்கு போன் பண்ணுகிறான். ஹெட்கிளார்க் போனை எடுத்து “யார் வேண்டும்?” என்கிறார்.

“சோமசுந்தரம் வேண்டும்” என்றதும் பியூனை அனுப்பி சோமசுந்தரத்தைக் கூப்பிடச் சொன்னார். ஆளுல், சோமசுந்தரம் இடத்தில் இல்லை. கானோம் என்று சொல்வதற்காக ஹெட்கிளார்க் போனை எடுத்து ‘ஹல்லோ’ என்கிறார். அவ்வளவுதான். தியாகராஜன் பேச ஆரம்பித்துவிடுகிறான்.

“என்னப்பா, சோமு, நேற்று சினிமாவுக்கு வருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டாயே! ஏன், உங்க ஹெட்கிளார்க் காலகண்டன் கொஞ்சங்கூட மசியவில்லையோ? தலைவலி என்று சொல்லி ‘டிமிக்கி’ கொடுப்பதாகச் சொன்னாயே;என் வேலையெல்லாம் கெட்டுப் போச்சு உன்னாலே" என்று ஒடும் வண்டிச் சக்கரத்தில் கோலைக் கொடுத்தது போல, சட சட என்று விளாசிவிட்டான், ஹெட்கிளார்க்கையும் சேர்த்து.

ஹெட்கிளார்க் என்ன செய்வார் ? போனை ஆத்திரத்தோடு வைத்துவிட்டார். வேறு அந்த போனில் என்ன செய்ய முடியும்? ஆனால், சாது போல நடிக்கும் சோமுவின் குட்டு, இதனால் வெளியாகிவிட்டதல்லவா ?