பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வாழ்க்கை விநோதம்


அவனுக்கு ஏதாவது வெடிவைக்க வழி வகுக்காமலா இருப்பார், அந்த ஹெட்கிளார்க் ?

***

அருணகிரி முதலியாருக்கு நவநீதன் கம்பெனியிலிருந்து டெலிபோன் வந்தது.

“ஹல்லோ, அருணகிரி முதலியாரா?”

“ஆமாம், யார் பேசுகிறது?”

“நவநீதன் கம்பெனியிலிருந்துதான் பேசுகிறோம். என்ன சார், இதான் உங்கள் நாணயமோ ? நாலு மணிக்கே பணத்தை அனுப்பிவிடுவதாகக் கூறினீர்களே?”

“என்ன! நவநீதன் கம்பெனியா ? பணமாவது, கொடுக்க வேண்டியதாவது ?”

“ஆமாம் சார், எங்களிடம் சரக்கு வாங்கியதற்குத் தரவேண்டிய, நாலுமாதக் கடன் தொகை. இப்பொழுது தெரிகிறதா ? கொடுக்க வேண்டியதிருந்தால் மறந்து தானே போகும் ?”

“என்ன, நானா உங்களிடம் சரக்கு வாங்கினேன் ? அருணகிரி முதலியாரா ?”

“ஆமாம் சார். அருணகிரி முதலியார்தான். நீர் தான்.”

“என்ன, இது ஒரு கதையாக இருக்கிறதே. வேறு யாராவது இருக்கும்.”

வேறு யாருமா ? தாங்கள், எம். அருணகிரி முதலியார் தானே?”.

“என்ன, எம். அருணகிரி முதலியாரா? என் பெயர் என். அருணகிரி முதலியார். டெலிபோன் நெம்பர் 66723.”

கொஞ்ச நேரம் நிசப்தம்.