பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணப்பித்து


பணத்திலே, மனிதனுக்கு ஆசை வேண்டியது தான். ஆனால், சிலருக்கு அளவு கடந்த பணப்பித்து இருக்கிறதே, அது மகா மோசம். பணத்திலே அப்படிப் பேராசை கொண்டிருப்பவனுக்குச் சந்தோஷமே கிடைப்பதில்லை. ஏனென்றால், சந்தோஷத்தை அவன் அடைய முடியாதபடி அவனுக்கும் சந்தோஷத்துக்கும் நடுவிலே, வேலியாக நின்று, அந்தப் பேராசை தடுக்கிறது. அவனுக்கு வயிறு பசிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கிளப்புக்குள் செல்கிறான். அங்கே பலகாரம் சாப்பிடும் பொழுது பலகாரத்தில் மனம் செல்வதில்லை. பணத்தைப்பற்றியே நினைப்பதனால், ‘ஐயோ’ இரண்டு இட்டிலிக்கு இரண்டணாப் போய் விடுமே!’ என்று கவலைப்பட்டுக்கொண்டே சாப்பிடுகிறான். இரண்டு அணாவுக்கு மேல் தின்னவே கூடாது என்று எல்லையும் கட்டிக்கொள்கிறான். ஆதலால், சாப்பிடுவதனால் உண்டாகும் ருசியின்பத்தை அவன் இழந்து விடுகிறான். அவனது பசியும் அடங்குவதில்லை. கிளப்பை விட்டு வெளிவந்தவுடனே, மறுபடியும் பசிதான்.

ரயில்வே ஸ்டேஷன், பிரயாணிகள் விடுதி முதலிய இடங்களெல்லாம், அவன் கண்ணுக்குக் கொள்ளையடிக்கும் இடங்களாகவே தோன்றுகின்றன. ஒவ்வொரு