பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணப் பித்து

69


மனிதனும், தன்னுடைய பொருள்களைக் கொள்ளையடிக்கவே வந்திருப்பதாக அவனுக்குச் சதா நேரமும் ஒரு பயம் இருந்துகொண்டே யிருக்கிறது. இதெல்லாம் பண ஆசைப் பித்தின் விபரீதங்கள் !

பண ஆசை பிடித்தவர்களுக்கு, ஒவ்வொரு தம்பிடியைச் செலவழிக்கும்போதும் பரம வேதனை ஏற்படுகிறது. ஒரு சமயம், என்னோடு ஒரு நண்பர் ரயிலில் வந்தார். அவரது சாமான்கள், வண்டியில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டன. திருச்சி ஜங்ஷனில், வேறு வண்டியில் மாறுவதற்காக, நாங்கள் இருவருமே இறங்கினோம்.

நண்பர், தமது சாமான்களையும் என் சாமான்களுக்குப் பக்கத்திலே இறக்கி வைத்துவிட்டு, என்னை நோக்கி “கொஞ்சம் நம்ம சாமான்களையும், ஒரு கூலி பிடிச்சு அந்த வண்டிக்குக் கொண்டுவரச் செய்யிறீங்களா ? நான் இதோ வாரேன்" என்று எங்கேயோ அவசரமாகப் போய்விட்டு வரப்போகிறவர் போலக் கேட்டார். நானும், `சரி' என்று தலையை ஆட்டினேன். அவர் சிறிது தூரம் போய், யாரையோ எதிர்பார்ப்பவர் போல நின்றுகொண்டிருந்தார். நான், எங்கள் இரண்டு பேர் பெட்டி படுக்கைகளையும் இரண்டு கூலிகளிடம் கொடுத்து, மாற்று வண்டிக்குக் கொண்டு போகச் செய்தேன். கூலி தமது சாமான்களைத்தூக்கினானோ இல்லையோ, நண்பரும் பின்னா லேயே வந்துவிட்டார்.

அவர், சாமான்களைத் தூக்கிவந்த ஆளுக்குக் கூலி கொடுக்க வேண்டிய கட்டம் வந்தது. தாமே கொடுப்பதாகச் சொல்லி, என்னைத் தடுத்துவிட்டார். ஆனால் உடனே கொடுக்கவில்லை. வண்டியில் ஏறிக்கொண்டு, வெகுேநரம் வரையில் தம் சாமான்களை எல்லாம் சரி பார்த்துக்கொண்டிருந்தார். ஆள், சிறிதுநேரம் பொறுத்துப் பார்த்தான். அவர் கூலி கொடுக்கிற வழி