பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வாழ்க்கை விநோதம்

யாய்த் தெரியவில்லே. கடைசியில் அவனே கேட்டு விட்டான். நண்பர் ஓர் இரண்டணாவை அவனிடம் வீசி யெறிந்தார். “இதென்ன சாமி, இது! என்ன பிச்சைக் காசா ?" என்று அவன், நண்பரிடம் அதைத் திருப்பி எறிந்தான். நண்பர் தகராறு செய்ய ஆரம்பித்தார். அவனை அமர்த்தியவர் அவரா ? நான்தானே. ஆகையால், அந்த விஷயத்தைத் தமது பேரத்துக்கு ஒரு வாதாக அவர் உபயோகிக்கத் தொடங்கினார்.

“ஏண்டா, நானாடா உன்னைக் கொண்டுவரச் சொன்னேன் ? என்ன கெட்டுப் போனாப்போல இருக்கு ? கொடுத்ததை மரியாதையாய் வாங்கிக்கிட்டுப் போ. இல்லே, சும்மாப் போகவேண்டியதுதான். ஒரு தம்பிடி கூடக் கொடுக்கமாட்டேன்" என்று கர்ஜித்து, மேலும் ஓரணாவைச் சேர்த்து, மூன்றணாவாக, அவனிடம் நண்பர் நீட்டினார். இதற்கெல்லாம் கூலியா மசிகிறவன் ? அவனும் மேலும் கூச்சல் போட்டான். இவரும் கத்தி னார். இவருக்குமேல் அவனும், அவனுக்குமேல் இவரும், மேலும் மேலும் சத்தம் போட்டுக்கொண்டே யிருந்தார்கள். வண்டி புறப்படும் சமயம் நெருங்கி விட்டது. நண்பரின் மேல் வேட்டியை, ஜன்னல் வழியாக அந்தக் கூலி எட்டிப் பிடித்துக்கொண்டு, “என்ன ஏமாற்றவா பார்க்கிறாய் ? பணத்தை வச்சிட்டு மறுவேலை பாரு” என்று மிரட்ட ஆரம்பித்தான். நண்பர் பயந்து விட்டார். பிறகு கசக்கிக் கசக்கி ஒவ்வொரு காலணாவா கப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்துக்கொண்டேயிருந்தார். அப்படி அவர் கொடுத்ததெல்லாங் கூடி மொத்தம் நாலணாத்தான். அதற்குள் வண்டியும் நகர்ந்து விடடது. பாவம் கூலியாள் அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. திட்டிக்கொண்டே நின்றான்.

இந்தப் பண ஆசை பிடித்த மனிதர் முதலில், “என்னடா காசு போயிற்றே !” என்று மிகவும் வருத்தப்