பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணப் பித்து

71

பட்டார். ஆனால், “கொடுக்க வேண்டிய கூலி எட்டணாவில் நாலணா மிகுத்துவிட்டோம்” என்று பிறகு கொஞ்சம் மனத்திருப்தி அடைந்தார். ஆனாலும், அது சந்தோஷமில்லை. சந்தோஷ மென்பது, அவர் சம்மந்தப்பட்ட மட்டில் மலடியின் குழந்தை மாதிரிதான். அவரால் சந்தோஷப்படவே முடியாது.

இப்படிப் பணப்பித்துப் பிடித்து அலைகிறார்களே, இவர்கள் தாங்கள்தான் சுகப்படுவதில்லை; பிறரையாவது சும்மா விடலாகாதா ? அதுவுமில்லை. எல்லாருக்கும் அவர்களால் கஷ்டம்தான்.

பணத்தைச் சேகரிப்பதற்கு நூற்றுக்கணக்கான நல்ல வழிகள் இருக்கின்றன. பணத்தைச் சேகரிப்பது குற்றமல்ல. ஆனால், அந்தப் பணத்தின்மேல் அபார மோகம் கொண்டு, எப்பொழுதும் அதைச் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருப்பதுதான் குற்றமாகிறது. பணத்தை வெளியே ஒட விடாமல், பெட்டியில் பூட்டி வைத்திருப்பதனாலேயோ, அல்லது பாங்கியில் போட்டு வைத்திருப்பதனாலேயோ ஒருவித உபயோகமுமில்லை.

எப்பொழுதும் பணம் நல்ல வழியில் செலவாகிக் கொண்டே இருக்கவேண்டும். செலவழிப்பதைத் தவிர, பணத்தால் வேறே என்ன பிரயோசனம் ? உண்ணாமல், உடுக்காமல், உறங்காமல் பணத்தைச் சேமித்து வைத்தால், நமக்குப் பின் வருபவர் யாரோ ஒருவர் அதைச் செலவழித்துவிடத்தான் போகிறார். தகப்பன் தம்பிடி கூடச் செலவழிக்காமல் லட்சக் கணக்காய்ச் சேர்த்து வைத்திருப்பான். மகன் அதையெல்லாம் கெட்ட வழிகளிலேயே செலவழிப்பான். அதனால் அந்த லோபி யடைந்த புண்ணியந்தான் என்ன ?

பணத்தைத் தானே வைத்துக்கொண்டிருப்பதால் சந்தோஷம் வந்துவிடாது. பிறருக்குக் கொடுத்து அவர்கள் நன்மை பெறச் செய்தால்தான் தன்னை