பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வாழ்க்கை விநோதம்


அவர்கள் போற்றிப் புகழ்வார்கள்; தனக்குப் பின்னும் தன் பெயர் நிலை நிற்கும். எச்சிற் கையாலும் காக்கை ஒட்டாதவனாக இருந்தால், யார்தான் மதிப்பார்கள் ? உடலுடன் பெயரும் புதைபட்டுத்தான் போகும்.

பள்ளிக்கூடப் பையன்களில் பலர், மேல் நாட்டாரைப் பார்த்து, வேடிக்கையாகத் தபால் தலைகள் சேகரிக்கிறார்களல்லவா ? அதுபோலத்தான் பண ஆசை கொண்டவனும் பணத்தைச் சேகரிக்கிறான். ஆனால், தபால் தலை சேகரிப்பது பொழுது போக்குக்காக ஓய்வு நேரத்தில் செய்யும் வேலை. பணம் சேர்ப்பதோ, வாழ்க்கை முழுவதையுமே ஈடுபடுத்திச் செய்யும் வேலையாக இருக்கிறது. தபால் தலை சேகரிப்பதில் உற்சாகம் இருக்கிறது. பணம் சேகரிப்பதிலோ, உற்சாகத்தின் வாசனைகூட இல்லை. ஒரு லட்ச ரூபாய் கையில் உள்ளவன் பத்து லட்ச ரூபாய் அடைய விரும்புகிறான். மீதி ஒன்பது லட்சத்தையும் சம்பாதிப்பதற்காக, அவன் தரித்திரனாகவே வாழ்ந்து வரவேண்டி யிருக்கிறது. அரை வயிற்றுக்குக்கூடச் சாப்பிட மனம் வருவதில்லை. எந்த வழியில், எப்படி, எவரிடமிருந்து பணத்தைப் பறிக்கலாம் என்றெல்லாம் சதா ஆலோசனை செய்ய வேண்டியிருக்கிறது. அவனது வாழ்க்கையில் சுகம் எப்படி ஏற்படும் ?

ஏராளமான லோபிகள் இருக்கிறார்கள். கையிலுள்ள பணத்தைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொள்ளுவதுதான் அவர்கள் வழக்கம். எப்போதும் பரிதாபகமான நிலைமையிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். வீடுவாசல், நிலபுலம் எல்லாம் ஏராளமாக ஒரு லோபிக்கு இருக்கும். ஆனால், கிழிந்த வேஷ்டி, பிய்ந்த செருப்பு இவற்றைத்தான் அவன் எப்போதும் அணிந்துகொண்டு வீதியில் நடந்து செல்வான். இப்படி அவன் கஷ்டப் படுவது எதற்காக பணத்தை மிகுத்து வைப்பதற்காகத்