பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளைக்காரரும் வெள்ளிக்கிழமையும்

63


13 பேர்கள்-இதிலெல்லாம் அவர்களுக்கு ஒரு வெறுப்பு இருக்கிறது.

ஒரு விருந்து நடக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதற்கு 13 பேர்களே வந்திருந்தால் 14-ஆவதாக ஒருவரை வலிய இழுத்து வந்து எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். ஏனென்றால், 13 வேண்டாத எண் அல்லவா?

அதே விருந்துக்கு 12 பேர்களே வந்திருந்தால் கூட அங்கே நிம்மதி இராது. எல்லோரும் அவச், அவச் என்று அள்ளிப் போட்டுக்கொண்டு எழுந்து விடுவார்களாம். ஏனென்றால், யாராவது இன்னொருவர் அங்கே வந்துவிட்டால், 13 ஆகிவிடுமல்லவா ? அதனால்தான் !

சில இடங்களில் 13 பேர்கள் விருந்து சாப்பிடுவார்கள். ஆனால், ஒவ்வொருவரும் அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு முன்னால் எழுந்திருக்கப் பார்ப்பார்கள். ஏன் அவர்கள் இப்படி அவசரப்பட வேண்டும் ? கடைசியாக, அதாவது 13-ஆவதாக எழுந்திருப்பவர் அந்த வருஷத்துக்குள்ளே இறந்துபோய்விடுவாராம் ! எப்படி இந்த நம்பிக்கை !

இந்த 13 என்ற சொல்லைக் கேட்டதுமே, அதிகமாகப் பயப்படுகிறவர்கள், பிரெஞ்சுக்காரர்கள்தாம். பிரான்ஸ் தேசம் முழுவதுமே 13 என்ற எண் வெறுக்கப்படுகிறது !

அங்கே, 13 என்ற எண் உள்ள வீட்டில் யாருமே குடியிருக்கமாட்டார்களாம் ! 13-ஆவது எண் போட்ட வீடே அநேகமாக அங்கு இருப்பதில்லையாம்!

வீதியில், ஒவ்வொரு வீட்டு நம்பரையும் பார்த்துக் கொண்டே போனால் 12-ஆம் நம்பர் வீட்டுக்கு அடுத்தது