பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சில்லறைக் கடன்


கொஞ்ச நாளைக்கு முன், பெங்களூருக்குப் போகும் நண்பர் ஒருவரை வழியனுப்ப ஸ்டேஷனுக்குப் போயிருந்தேன். அப்போது என் நண்பருக்குத் தெரிந்த இன்னொருவரும் அங்கே வந்திருந்தார். அவரும் வழியனுப்பத்தான் வந்தார் போலிருக்கிறது. வண்டி நகர்ந்தது. நான் அவசரமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன்.

அச்சமயம், அந்தப் புதிய மனிதர் என்னைப் பார்த்து, “சார், உங்கள் பெயர்...?” என்று இழுத்தார். பெயரைத் தெரிவித்தேன்.

“உத்தியோகம்....?” என்றார். அதையும் சொன்னேன். பிறகு, அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

மறுநாள், நான் ஆபீஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அதே மனிதர் அங்கே வந்துவிட்டார். பெங்களுர் சென்ற நண்பரைப் பற்றியும், சிறிது உலக விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். பின்பு, “போய் வருகிறேன்” என்று புறப்பட்டார். வந்த