பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 மக்கள் அனைவரிடமும் அறிவு விதை காத்துக்கொண் டிருக்கிறது. அதை முளேக்க வைப்பது சமுதாயக் கடமை. வளர்ப்பது, சமுதாயத்திற்கு நன்மை. அதைத் தனக்காக, தன் குடும்பத்திற்காக, அண்டி யிருப்போருக்காக மட்டும் அல்லாது, எல்லா உயிர்களுக்கும் உதவியாக்குதல், நம் ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும். "அன்னையை வேண்டுதல்' என்னும் சிறு வழிபாட்டுப் பாடலிலும், பாரதியாரின் வேண்டுதல், அவருக்கு சொர்க் கத்தை மட்டும் தேடுவதாயில்லை; அது, வையத்தின் நல்வாழ்வைக் கருவாகக் கொண்டிருப்பதாகக் கொள்ள லாம். உருவில் மக்களாகப் பிறந்த உடனேயே, உணர்வில், நினைவில், சொல்லில், செயலில் மக்களாகி விடுவதில்லை. ஒவ்வொருவர் இடத்திலும், நல்லியல்புகள், சுடர்மிகு அறிவுக்கூறுகள், சான்ருண்மை ஆகியவை காத்துக்கிடப் பதைப்போல், திய இயல்புகள், அறியாமை, சோம்பல், விலங்கு இயல்புகள், கீழ்த்தன்மை ஆகியவை ஊடுருவி நிற்கின்றன. பிந்தியவற்றை அவித்து, முந்தியவற்றைப் பயிரிட் டால், பிறவிப்பயனை எட்டுவோம். கோடிக்கணக்கான மக்களோ, அவ்வழியில் காலெடுத்தும் வைக்கவில்லை. 'பசிக்குச் சோறு: எப்படி வந்தாலும் சரி. பொழுது போக்க, எதையும் பேசுவோம். இருப்பதைக் காட்ட , தொல்லை கொடுப்போம்" என்னும் விலங்கு நிலையோடு முடிகிறது: எண்ணற்றவர்கள் பிழைப்பு. அவ்வேடிக்கை மனிதராக விரும்பவில்லை, பாரதியார். மனிதன் எந்நிலைக்கு எட்ட முடியுமோ அந்நிலையை விழைகிருர், தெளிந்த காட்சியை உடைய பாரதி.