பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E09 பரந்து வீசி வாழ்விக்கிறது. வேடிக்கை மனிதராக வாழ விரும்பாத பாரதியார், கல்லை வயிர மணியாக்கல்-செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும் புல்லை நெல்லெனப் புரிதல்-பன்றிப் போத்தினை சிங்க வேருக்கல்-மண்&r வெல்லத் திணிப்பு வரச் செய்தல்-என விங்தைதொன்றிட இந்நாட்டை-நான் தொல்லை தீர்த்துயர்வு கல்வி-வெற்றி குழும் வீரமறிவாண்மை கூடுந் திரவியத்தின் குவைகள்-திறல் கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள்-இவை நாடும்படிக்கு விண்செய்து-இந்த நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக்-கலி சாடுந் திறனெக்குத் தருவாய்' என்று வரங்கேட்கும்போது, அவரது நாட்டுப்பற்றும், பொதுநலக் கண்ணுேட்டமும், நம்மை மெல்லத் தழுவித் தெம்பூட்டுகின்றன. பெறும் திறல் அனைத்தும் சமுதாயத்திற்கே என்பதை உணர்ந்து நடந்தால். குறைகள் கரைந்து, இருந்தவிடம் தெரியாமல் மறைந்துவிடும். ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்யப் பிறந்த மனிதன், அப்படி அன்பு செய்யும் ஆற்றலைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் மனிதன், அதை வெளிப்படுத்துகிருளு? இல்லை. மாருக, சீறும் புலியாக, பதுங்கும் நரியாக, கொட்டும் தேளாக, கடிக்கும் மூட்டைப் பூச்சியாக மாறி, கண்டார் நகைக்கும் வாழ்கை நடத்துகிருன்.