பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III பத்திலும் பதினைந்திலும் சீரிய கருத்துள்ள பாடல் களை மனப்பாடஞ் செய்து கொண்டவர்கள் நற்பேறு பெற்றவர்கள் கட்டிழந்து வெகுளும்போது, உருளும் போது, தடுத்து நிறுத்தும் கட்டைகளாக, அப் பாடல்கள் மின்னும். வெகுளியின் தீமையையும் அதனல் ஏற்படும் நலிவை யும் தெள்ளென விளக்கும் பாரதியின் பாடலையோ, அதற் கொப்பான பிற பாடல்களையோ, பதினேயம் பருவத்தே படித்துக் கொள்ளாதவர்கள் எப்படி நடக்கிருர்கள்? வெகுண்டு, வெகுண்டு; கணக்குத் தீர்க்க முயன்று, முயன்று தம்மைத் தாமே அழித்துக் கொள்வதைக் காண்கிருேம். அந்தோ அவலம்! நாம் பட்ட பாட்டினைப் பின்வரும் தலைமுறைகளும் படவேண்டுமா? வேண்டாம். நம்மோடு நிற்கட்டும், பொங்கிப் பொங்கிப் பாழாகும் போக்கு. இளைஞர்களுக்குப் பாரதியின் பாட்டைக் கற்றுக் கொடுங்கள். அவர்கள் வாழக் கற்றுக்கொள்ளட்டும். அவர்களாவது, 'சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயாற்சுட்டுச் செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள்வார் தாம் மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார் சினம்.பிறர்மேற் ருங்கொண்டு கவலையாகச் செய்ததெனித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்’ என்னும் எச்சரிக்கையை உளங்கொண்டு, சினத்தை முளைக்கவிடாது, வாழட்டும்.