பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூயவரா மென்றிங் கூதேடா சங்சம்' என்று சங்கொலி கேட்கிறது, ஆத்திகர்கள் ஆத்திரப்படத் தேவையில்லை; திகைக்க வும் தேவையில்லை. இக் கருத்தோட்டம் புதியதல்ல; ஏறுமாறனதல்ல; தொன்மையானது: இடையருது தொடர்வது. "மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என்னும் அறிவொளி, நாம் வழிவழி பெற்று வரும் சுடரொளி. பாரதியார் ஆத்திகர்; இந்து என்பதை நினைவில் கொண்டு சிந்தித்தால், பாரதியின் சங்கநாதத்தின் உண்மையும் நன்மையும் புலப்படும். செவிக்கினிய இம்முழக்கம், கோடி கோடி மாந்தர்தம் சிந்தைக்கு உரமானல், வையத்துள் வாழ்வாங்கு வாழலாம். தனக்குத் தனக்கென்று வேலி கட்டி, பாத்தியிட்டுக் கவலைப்பட்டு மாயும் மாந்தரைப் பார்த்து, உடன் பிறந்தார்களைப் போல-இவ் வுலகில் மனித ரெல்லோரும்; இடம்பெரிதுண்டு வையத் தல்-இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?" என்று கேட்கிருர் மகாகவி பாரதியார். பதில் சொல்லாது திகைக்கையில், 'வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்-இங்கு வாழும் மனிதரெல்லோர்க்கும் பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்-பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்' என்று கட்டளையிடுகிரும் பாரதியார்.