பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இல்லாவிட்டால், தன்ட்ைசி பெற்று முப்பதாண்டு கள் ஆன பிறகும். நூற்றுக்கு எழுபது இந்தியர் தற்குறி களாக இருப்பார்களா? - சிலகாலம் தமிழ் ஆசிரியராக இருந்த தொடர்பால், பாரதியார் கல்வியின் தேவையை வற்புறுத்துகிருர் என்று எண்ணிவிடாதீர்கள். இந்தியக் கல்வி முறையால் விளையும் தீங்கை உணரா மல் பாடிவிடவில்லை அமரகவி பாரதியார். கரும் புச் சக்கை அடுப்பெரிக்கவே பயன்படும். நம்முடைய கல்வியும் அவ்வளவிற்கே பயன்படும். வெகுள வேண்டாம், சற்று பொறுமையைக் கடைப் பிடியுங்கள் பாரதியாரின் கருத்திற்குக் காது கொடுங்கள். அதோடு விட்டுவிடாதீர்கள். அதைப்பற்றிச் சிந்தியுங் கள். சிந்தித்துத் தெளிந்த எண்ணங்களை ஊரறியச் சொல்லுங்கள். ஆள் தாக்கிச் சட்டம் நடைமுறையில் இல்லாத காலத்தில்கூட, ஊமைகளாக, ஆமைகளாக இருந்துவிட் டால்? கண்டவர்கள் எல்லாம் நம் வழித் தோன்றல்களின் கல்வியினைப் பந்தாடிக்கொண் டிருப்பார்கள். கோடி கோடி மக்களின் வாழ்வைத் தாக்குமே என்பதைப்பற்றி யாரும் எண்ணவில்லையே' என்று, பின்னர் அங்கலாய்த்துப் பயன் இல்லை. உடலுக்கு உளட்டமூட்ட உணவு: இதுவே உணவுத் தேவைக்கு அடிப்படை. ஊட்டமூட்டும் உணவையா நாம் நாடுகிருேம்? இக் காலத்தில்நாம் உணவில் தேடுவது வேறு ஏதேதோ!