பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தனிமனிதனுள் உறங்கிக் கிடக்கும் அறிவியல்புகளை, ஆற்றல் செழுமையினே, பண்பினை, மென்மைகளை, உள்ள விரிவினை, உள்ள உருக்கத்தினைப் பயிரிடும் முயற்சிக்குப் பெயர், கல்வி என்பதாகும். - நம் உணவு முறை எப்படி உணவின் பலனைப் பாழாக்குகிறதோ, அதேபோல் நம் கல்விமுறை, பல்வகை வளர்ச்சிகளை அரித்து நாசமாக்கும் நச்சுப்பூச்சியாக மாறி விட்டது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது, தங்களுடைய ஆட்சியின் குறுகிய தேவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு, ஒர் கல்வி முறையைக் கொண்டுவந்தார்கள். முழு மனித வளர்ச்சி எல்லா மனிதர்களுடைய முழு வளர்ச்சியல்ல அவர்களுடைய குறிக்கோள். மூன்று வயதுப் பையனுக்குத் தைத்த கால் சட்டை யைப் பாதுகாத்துவைத்திருந்து, முப்பது வயதுக் காளே யானபின்னர் அவனை அணியச் சொல்லி அடிக்கிறது, நம் கல்வி முறை. இது மனிதவளர்ச்சிக்கும் பயன்படுவதில்லை; நாட்டின் தேவைகளையும் நிறைவு செய்யவில்லை. - பாரதியார், ஆங்கிலக்கல்விக் கோயிலின் வெளியே நின்று வேடிக்கைப் பார்த்துவிட்டுப் போனவர் அல்லர். அக் கோயிலில் இருந்து கும்பிட்டுப் பார்த்த பிறகே, அதன் பயனற்ற தன்மையை, உளுத்துப் போகச் செய்யும் தீங்கினை உணர்ந்தபடி பாடுகிரு.ர். தந்தையின் ஆணைப்படி, திருநெல்வேலி செல்கிருர்: ஆங்கிலப் பள்ளியில் சேர்கிரு.ர்.