பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 ஆங்கே, வெள்ளைத்துரைமார் மட்டும் பாடஞ்சொல்ல வில்லை. வேதம் ஒதும் வழியில் வந்த ஐயன்மாரும், போட்டி யிட்டுக் கொண்டு, புதிய ஆங்கிலக் கலையைக் கற்பிக்க முயன்ருர்கள். அழகிய காவியங்கள் பாடங்களில் இடம்பெற்றன. அவை ஒன்ரு, இரண்டா? இல்லை; பலப்பல. பற்பல கவிதை கற்றுப் பெறவேண்டியது எது? கவிதையுளம்; அழகு உணர்ச்சி, கற்பனை வளர்ச்சி தேர்வையும், அதில் மேலும் மேலும் அதிக மதிப் பெண்கள் பெறும் உத்திகளையும் முதன்மைப்படுத்திப் படிக்கும் பாட்டுகளில் கவியுளம் மின்னுமா? அழகு உணர்ச்சி துளிர்க்குமா? கற்பனை, பதவிகளையல்லவா வட்டமிட்டுக் கொண்டிருக்கும். கவிதை கற்பது, வாழ்க்கையை எழிலூட்டும் நல்லுணர்வுகளைப் பெற என்பதை, ஐயரும் துரைமாரும் மறந்தார்கள்; பெற்றேர் நினைத்ததே இல்லை பயில்வோர் என் செய்வார்? +. கவிதைகளைச் சிதைத்து, சொற்களின் இலக்கண விதி களின் இடிபாடுகளுக்கிடையே Վ91Ք(5, மென்மை, புதைக்கப்படுவதை அவர்களால் மாற்ற முடியுமா? முடியாது. தப்ப முடியாது. பொழுதெலாமுங்கள் பாடத்தில் போக்கிநான் மெய்யயர்ந்து விழிகுழி வெய்திட வீறிழந்தென துள்ளம் நொய் தாகிட ஐயம் விஞ்சிச் சுதந்திரம் ரீங்கியென் அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால் செலவு தந்தைக் கோராயிரஞ் சென்றது: தீதெனக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன. Q/Т.—8