பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.3 இன்று நாம் காணும் அவலநிலை, பாரதி ஆங்கிலக் காட்டாற்றில் உருண்ட போதும் இருந்தது. எனவே, பாரதிக்கு ஆற்ருமை பொங்குகிறது. "கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார், அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார் துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள் சொல்லு வாரெட்டுணைப் பயன் கண்டிலார். முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளில் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியுங் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள் என்ன கூறிமற் றெங்ங்ன் உணர்த்துவேன் இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! என்று பாரதியார், தமது சுயசரிதையில் முழங்குகிரு.ர். இம்முழக்கம் உண்மையின் ஆழத்திலிருந்து வெடிக்கும் முழக்கம். நெஞ்சில் ஏற்கவேண்டிய முழக்கம்; உணர்வில் கலக்கவேண்டிய முழக்கம்; எரிமலையெனப் பொங்.இது செயல்பட வைக்க வேண்டிய முழக்கம். இக்காலக் கல்வி, இத்துணை உளுத்த கல்வி என்ப தால், கல்வி நிலையங்களே விட்டு வெளியேறிவிடலாமா? ஆகாது. பங்கீட்டு அரிசி எப்படியிருந்தாலும், சவித்துக் கொண்டாகிலும் வாங்கி உண்டு, உயிரைப் பிடித்து வைத்துக் கொள்வதே முறை.