பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டு வரை, சமுதாயத்தை நலிவுறச் செய்தது இப்பழக்கம். இது பாரதியார் காலத்தில் தட்டிக் கேட்பாரற்றுத் தன்ட்ைசி புரிந்தது. ஆகவே பாரதியார் கட்டிளங்காளைப் பருவம் அடையும் முன்பே, பூப்படையாத குழந்தையை மணந்துகொள்ளும் நிலைக்கு ஆளானர் பாசமென்பது இயற்கையின் சுரப்பு. அதை அடைத் தல் அரிது. இயற்கையாகச் சுரக்கும் பாசத்தை அதன் ஒட்டத்தில் செல்லவிட்டு, ஆற்றுப்படுத்தி, பருவம் முதிர்ந்த பின் மணப்பதே Cք6Ծ) D இம் முறைவழி முறையில்லாதவை நம் பிழைப்பாக மாறிவிட்டது. இது பெருந்தீங்கு. இத்தீங்கு பாரதியை கெளவிற்று. அவர் பத்து வயதில் ஒர் கன்னியின்பால் அன்பு கொள்கிரு.ர். அந்நட்பு காலாவட்டத்தில் காதலாக மாறி யிருக்கக் கூடும். ஆனல், தந்தை இயற்கையின் போக்கில் பாரதியை விட வில்லை. பிஞ்சுப் பருவத்தே மற்ருேர் பிஞ்சை அவருக்கு மணம் புரிவிக்கிரு.ர். பிஞ்சு மனைவியிடம் குறையேதும் இல்லை. ஆயினும் மதலைக்குத் தாலிகட்டுவதை, மணம் என்று ஒப்புக்கொள்ள பாரதியின் உண்மை உள்ளம் மறுக்கிறது. நெஞ்சின் ஆழத்திலிருந்து வேதனை பீறிட்டுப் பொங்க, "ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊனறி வணங்கினன்;