பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I28 என்று பாரதியார் படுவதைக் கேட்டுச் சினந்தால், பயனில்லை; சிந்தித்தால், ஆழ்ந்து சிந்தித்தால், பயன் உண்டு. எதிர்காலம் யாருக்கு நீளமான்து வெறும் வேடத்தில் நிற்கும் மூத்தவர்களுக்கா? உண்மையின் சூடு தணியாத இளைஞர்களுக்கா? பிந்தியவர்களுக்கா? இளைஞர்கள் எதிர்காலம் நீளமானது மட்டுமல்ல; அதிக வாய்ப்புக்களைக் கொண்டு வந்து நிறுத்தக் கூடியது. மூத்த எங்களைவிட, இளைய காளேயரோ, தங்கள் எதிர்காலத்தை நல்ல வண்ணம் உருவாக்கிக் கொள்ள, காலமும் வாய்ப்பும் நிறையப் பெற்றவர்கள். மன நிகழ்ச்சி யில் பொய்யைக் கைவிட்டு விடுங்கள். மனை வாழ்க்கை, கணவன் மனைவியூடே சுடர்விடும் காதலை அடிப்படையாகக் கொண்டது. காதல் உற்பத்திப் பொருள் அல்ல; காசுக்காக, பதவிக்காக, புகழுக்காக, காட்டும் அன்பை, காதல் என்று சொல்லி களங்கப்படுத்தல் ஆகாது. காதல் இயற்கையாக எழுவது. புனிதமான காதலை, உயிர்நாடியான காதலை, நசுக்கிக் கொல்வதில் நம் சமுதாயம் காட்டும் அக்கறை அளவிட முடியாதது. இந் நிலையைப் பாரதியார் வெறுக்கிருர். எனவே, 'நாடகத்தில் காவியத்தில் காதலென்றல் நாட்டினர் தாம் வியப்பெய்தி கன்ரும் என்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்ருே ரத்தே ஊரினிலே காதலென்ருல் உறுமு கின்ருர்,