பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்ருர் பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெல்லாம் பொருமையில்ை விதிகள் செய்து முறைதவறி இடரெய்திக் கெடுகின் ருரே' என்று வன்மையாக இடித்துரைக்கிருர். இதைக் கருத்திற் கொள்வோம். பாரதியாரின் தந்தை, பொருள் ஈட்டலே வாழ்க்கை யென்று எண்ணி, ஏமாந்து ஏங்கினர். இது தவறு. பாரதியார், தனது சுயசரிதையில், இதைச் சுட்டிக்காட்டு கிரு.ர். பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன் போற்றிக் காசினுக் கேங்கியுயிர் விடும் மருளர்தம் மிசையே பழிசுறுவன். என்கிரு.ர். இது நற்காட்சி; தெளிவான கருத்தே. வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வதொன்றையே மேன்மைகொண்ட தொழிலெனக் கொண்டனன் என்று தன் தந்தையைப் படம் பிடித்துக் காட்டுகிரு.ர். அதனால் என்ன தீமை? سير" நேயமுற்றது வந்து மிகமிக, கித்தலும் மதற்காசை வளருமால் காயமுள்ளவரையுங் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே' இது மிகையல்ல; கவிஞரின் கற்பனைப் பாய்ச்சல் அல்ல. நாம் தலைமுறைதோறும் காணும் அவலக் காட்சிகளே. இவற்றில் இருந்து நாம் விடுபடக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்கோடு, தேசத்துள்ள அறிஞர் அறிமினே! அறமொன்றேதரும் மெய்யின்பம் ஆதலால் அறனயே துணையென்றுகொண் டுய்திரால்'