பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக. நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க, நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக. நமது பாட்டு மின்ன லுடைத்தாகுக, நமது வாக்கு மின்போல் அடித்திடுக. வாழப் பிறந்த மனிதன்: வாளாயிருத்தல் ஆகாது. பிறர் உழைப்பால் பிழைக்கும் புல்லுருவியாகக் கூடாது. எனவே, பாரதியார். 'நமக்குச் செய்கை இயல்பாகுக ரசமுள்ள செய்கை இன்பமுடைய செய்கை விளையும் செய்கை பரவும் செய்கை நமக்கு மகாசக்தி அருள் செய்க" என்று வேண்டுகிருt. மகா சக்தியை வழிபடா தோரும் மேற்கூரிய தன்மையுடைய செயல்கள், மனித னுக்கு இயல்பாவதையே விரும்ப வேண்டும். நல்ல செயல் களே மானுடத்தின் நன்மூச்சு. முரண்பாடுகளின் பிணைப்பே, உலகம். வாழ்க்கை, இயக்கம், இரண்டிற்கும் இன்றியமையாதன இப் பிணைப்பு. இரவும் பகலும் சேர்ந்தே நாள். இருளும் ஒளியும் சேர்ந்தே நாள். ஞாயிற்றின் வெம்மையில்லாவிட்டால், கடல் நீர் மேகமாகாது. கொண்டல் பெய்வதற்குக் குளுமை தேவைப்படு கிறது. குளுமை தாக்கி மழை பெய்வதால்தான் நீர் நிலை கள் மீண்டும் நிரம் புகின்றன. எனவே, மக்கள் இனம் மருளத் தேவையில்லை. நோயுண்டு, மருந்துண்டு அயர்வுகொல்லும் அதனை ஊக்கம் கொல்லும். அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும்'