பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.35 அது அமிழ்தம், நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயாளுல், காற்று கன்று என்கிருர் பாரதியார். ஈரமில்லாத வீடும் நல்ல உடையும் பெரும்பாலோருக்குக் கானல் நீராக அல்லவா உள்ளன? எல்லோரும் வாழும். நன்ருக வாழும், புதிய பாரதம் உருவால்ை, எல்லோருக்கும் ஈரமில்லாத வீடும் போதிய உடையும் கிடைக்கும். அத்தகைய சமுதாயம் தானே உருவாகாது; நாமே உருவாக்க வேண்டும். அதற்காக முயல்வோமாக, தியாகம் செய்வோமாக. தனி மனிதத் துய்மையிலே, சராசரி இந்தியனுக் குள்ள அக்கறைபற்றி பெருமை கொள்ளலாம். ஊர்த் தூய்மையைப்பற்றி அவனுக்குள்ள அலட்சியம் ஈடு இணை யற்றது. அவன் அசுத்தப் படுத்தாத பொது இடம் உண்டா? தெருவெல்லாம் துப்பிக்கொண்டே போகும் வள்ளல்கள் நாம். சளியை எங்கே சிந்துவது என்னும் வரன்முறை இல்லாதவர்கள் நாம். சுவர் கண்டதும் சிறுநீர் கழிப்பது நாயின் இயல்பு. உரிமை பெற்றுள்ள இந்தியன் அதோடு போட்டி போடு கிருன் என்பது மிகையல்ல. தன் வீட்டு எச்சில் இஃலயை எதிர்வீட்டுப்பக்கம்அவர்கள் பாராத வேளையில்-எறிவதில், நம் தாய்க்குல வள்ளல் தன்மைக்கு ஈடேது. தன்னட்சி பெற்ற பிறகு, இவ்வுரிமைகள் விரிந்துள்ளன. நம் மக்கள் பாரதி சொல்வதைக் கேட்டால் நல்லது பின் பற்றினல் அதிலும் நல்லது.