பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 முறையாகப் புகுந்தும், வெளியேறியும் இயங்கும் மூச்சு கைம்மாறு கேட்பதில்லை; பொன்னைப் பொருளை அவாவி வெம்புவதில்லை. புகழைப் போற்றுதலை விழைந்து குழைவதில்லை; எதையும் எதிர்பாராமல் மூச்சு இயங்கு கிறது. நாமும் எதையும் எதிர்பாராமல் தொழில் புரிதல் கடமை; தொண்டு செய்தல் உரிமை: பாலித்தல் பண்பு: அந்தோ! பரிதாபத்திற்குரிய நாம்? கண்ணை மூடினல் காணமுடியாத பொருளே எல்லாம்' என்று நம் பார்வையைக் கெடுத்துக்கொண்டுள்ளோம். கண்ணே மூடுவதற்கு முன்பாவது, கணக்கில் எழுதிவைத் துக் கொண்டுள்ளதைத் தவிர, நாள்தோறும் கோடிகோடி. யைத் தொட்டுத் தொட்டு மகிழ முடியுமா? உண்டு உண்டு செரிக்க முடியுமா? முகர்ந்து முகர்ந்து மயங்க (էԲւգայւDr? (Մագ.ԱսTԱ/ (Մագ.Այո g/, தன் இயற்கைக்கு நிறைவு செய்யத் தொழிலோ தொண்டோ ஆற்றவேண்டியவர்கள், நாம்."என்னஆதாயம் கிடைக்கும் என்னும் பொய்மான் வேட்டையில் முனைந்து அல்லல்படுவது அழசல்லவே. எனவே, பலன் கருதாப் பணியை நமக்குக் கட்டளையிட்டார்கள் ஆன்ருேர்கள். அதை மறந்து, பலன், வேளைக்கு வேளை ஆதாயம், புகழ், பாராட்டு என்பனவற்றைக் குறிக்கோளாக்கி கொண் டோம். எனவே, நம் அறிஞர்களின் ஒளி, சுற்றியுள்ளோ ருக்கு எள்ளளவும் உதவுவது இல்லை. இனியாவது நாட்டின் அறிஞர்களும், மக்களின் தலைவர்களும் தொண்டின் தேவையை மு சிறுத்துவார்களாக. எவ்வளவு கிடைக் கும், என்ன ைெடக்கும் என்பதைச் சிந்தனை செய்யாமல், எப்போது தொண்டாற்ற வேண்டும், எவ்வளவு தொண் டாற்ற வேண்டும், எவருக்கு நியாயம் வழங்கவேண்டும் என்பனவற்றையே சிந்திக்கக் கற்றுக் கொள்வார்களாக,