பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I43 எவருக்கு நியாயம் வழங்குவது என்றதும், பாரதி யாரின் கதைக்கொத்து நினைவிற்கு வருகிறது. 'மிளகாய்ப் பழச் சாமியார்' என்னும் கதை மூலம், பாரதியார் இக்கால இந்தியர்களுக்குத் தேவையான அரிய கருத்துகளை மிக அழகாக வெளியிடுகிரு.ர். பாரதியாரின் மிளகாய்ப்பழச் சாமியார், உலகம் அறியாத சாது அல்ல. அவர் கூறுகிருர்: 'ஹா, ஹா, பொறுத்துப் பொறுத்துப் பொறுத்து இருந்தது போதுமடா, போதுமடா, போதும்.' உலகத் திலே நியாயக்காலம் திரும்புவதாம். 'ருஷியாவிலே கொடுங்கோல் சிதறிப்போய்விட்ட தாம். 'ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டும் என்று கத்துகிருர்களாம். 'ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக் கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை. 'மறையவனுக்குப் பார்ப்பானும், கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். "பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதை யெல்லாம்விட முக்கியமென்று நான் சொல்லுகிறேன். "தெருவிலே வண்டி தள்ளி, நாலணு கொண்டு வருவது மேல் தொழில் என்றும், அந்த நாலணுவைக்கொண்டு நாலு வயிற்றை நிரப்பி வீடு காப்பது, தாழ்ந்த தொழிலென்றும் நினைக்கிருன். - -