பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 "ஆணும் பெண்ணும் சமானம். இந்த நியாயத்தை நிலை நிறுத்துவதற்கு நீங்கள் உதவிசெய்ய வேண்டும்." நெஞ்சில் நிறைந்து செயல்படவேண்டிய உரை. சமத்துவம் பிறர் கொடுக்கும் கொடைப்பொருள் அல்ல. உரியவர்கள் உழைத்துப் பெறவேண்டிய உரிமை. நம் நாட்டுப் பெண்கள் உரிமைக்கு உழைத்து விடப் போகிருர்கள் என்னும் அச்சத்தால் அல்லவா, பதிலுை முழச்சேலையையும், கழுத்தை அழுத்தும் சுமைகளையும் சிறப்புகளாக்கி ஏமாற்றி வைத்துள்ளோம். படிக்காத பாட்டிக்கு பேய்க்கதைகள் மேல் நம்பிக்கை. படித்த பெண்களுக்கோ, பேய்ப் படங்கள்மேல் தணி யாக் காதல். அவையிருக்க, ஆண்களாகிய நமக்குப் பயன் ஏன்? இக்காலத்தவருக்குக் கசப்பானவற்றை, குள்ளசாமி யார் வாயால் கூறுகிருர்: o "முதலாவது நாக்கை வெளுக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது. புறஞ்சொல்லக்கூடாது. மு.கஸ்துதி கூடாது. தற்புகழ்ச்சி கூடாது. வருந்தச் சொல்லலா காது; பயந்து பேசக்கூடாது' என்று பாரதியார், குள்ளச் சாமியாரைக்கொண்டு, நமக்கு அறிவுறுத்துகிரு.ர். இது நம் உயிரில் கலந்தால், உண்மை தழைக்கும். உண்மை படரப் படர, வாழ்வு மலரும். "எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு, உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை : நோவு முதலிய குட்டிப் பேய்களெல்லாம், உழைப்பைக் கண்டவுடன் ஒடிப்போய்விடும்' என்று சித்தக் கடலில் பாரதியார் கூறுகிரு.ர்.