பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. பாரதி பாடல் வழி தெரிந்துகொள்வோம், அன்றைய இந்தியா போன்ற அடிமை நாட்டின் மக்கள். ஒழிவறு நோயிற் சாவார், ஊக்கமொன் றறிய மாட்டார். கழிவுறு மாக்க ளெல்லாம் இகழ்ந்திடக் கடையில் நிற்பார்: இழிவறு வாழ்க்கை தேரார் கனவினும் இன்பங் காணுர் அழிவறு பெருமை நல்கும் அன்னே! நின்அருள் பெருதார்! என்று, பாரதி படம் பிடித்துக் காட்டுவது மிகையல்ல; உண்மையே! அடிமைத்தனத்தின் இழிவையும் கொடுமையையும் உணர்ந்த வீரக்கவிஞர் சூளுரைக்கிருர் என்ன குளுரை? சுதந்திரத்தைப் போற்றிக் காக்கச் சூளுரைத்துக் கொள்ளுகிருர், எத்துணை இடர்கள் முன்னின்ருலும், உரிமைக்காகப் போராட உறுதிகொள்கிரு.ர். உயிரிலும் இனிய உரிமைக்காகப் போராடிய நாட்டுப் பற்ருளர்களைக் கெளவிய துன்பங்கள் பலப்பல. எதையும் பொருட்படுத்தாது, இழந்த உரிமையைப் பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டிருந்த பாரதியார்: இதந்தரு மனயின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றலும் விதந்தரு கோடி இன்னல் விளக்தென அழித்திட் டாலும் சுதந்திர தேவி! மின்னத் தொழுதிடல் மறக்கி லேனே!