பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 என்று, உலகறியச் குளுரைத்தார், கவியரசர் சுப்பிரமணிய பாரதியார். அச்சூளுரையை எண்ணற்ற தேச பக்தர்களும் ஓங்கி ஒலித்தனர். உரிமை பெற்ருல்தான் வாழ்வு பெறமுடியும். இழந்த உரிமையை எப்படிப் பெறுவது? இவரும் அவரும் கொடுக்கும் பரிசுப்பொருளா தன்னாட்சி உரிமை? இல்லை. அது போராடிப் பெறவேண்டிய ஒன்ருகும். போராட்டம்: வலிமைபெற ஒற்றுமை தேவை. உலைக்களத்தில் இரும்புத் துண்டுகள் பலவும் உருகி, ஒன்ருகி ஓடும். அதைப்போல், இந்திய மக்கள் உரிமை வேட்கைச் சூட்டினல் உருகி ஒன்ருக வேண்டும். எனவே: உரிமை வேட்கையை மூட்டப் பாடுகிருர் பாரதியார் "வீர சுதந்திரம் வேண்டிகின்ருர் பின்னர் வேருென்று கொள்வாரோ?-என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ? புகழும் நல்லறமுமே யன்றியெல்லாம் வெறும் பொய்யென்று கண்டாரேல்-அவர் இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு இச்சையுற் றிருப்பாரோ? பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி.எனும் பெற்றியை அறிந்தாரேல்-மானம் துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பாரோ? விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் மின்மினி கொள்வாரோ? கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ?