பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 | உருவாகாதிருக்கும் பொருட்டு, நாட்டுப் பற்ருளர்களில் சிந்தனையாளர்கள், அரசியல் விடுதலையைக் கொண்டு ன்ன செய்யவேண்டுமென்பதைக் கோடிட்டுக் காட்டினர் கள். அன்னியன் ஆளக்கூடாது என்பதற்காக மட்டும், இந்திய நாட்டுக்கு விடுதலையைக் கோரவில்லை. அந்த அவமானம் துடைக்கப்படுவதோடு, பெற்ற உரிமையைக் கொண்டு, நாட்டின் நலிவைப் போக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டார்கள். பல நூருயிரம் ஆண்களும் பெண்களும் சிறைகளிலே அடைபட்டுக் கிடந்தார்கள். இன்னல் பல ஏற்ருர்கள். நாட்டின் நலிவைப் போக்குவது எப்படி? வலுத்த வனக் கொழுக்க வைப்பது நலிவைப் போக்குவது ஆகுமா? ஆகாது. இளேத்தவனுக்கு வலிமை யூட்டுவதே" நலிவைப் போக்குவதாகும். நம் இந்தியாவில், வாழையடி வாழையாக வந்த வறுமை, ஆங்கில ஆட்சியின் போது நடந்த அதிகப் படியான சுரண்டலால், தாங்கொளுக் கொடுமையாகி விட்டது. எனவே, பொதுமக்களிடையே பரவியிருந்த வறுமையை ஒழிப்பதே அரசியல் உரிமையால் ஆற்றப்பட வேண்டிய முதற் பணியாகும். இலட்சாதிபதிகள் பல இலட்சாதிபதிகள் ஆகும் போதும், நாட்டின் சராசரி தனிஆள் வருமானம் உயரும்; ஒடப்பரெல்லாம் தொழில் அப்பர் ஆகும்போதும், நாட்டில் தனி நபர் சராசரி வருவாய் அதிகமாகும். முந்தியது செல்வப் பெருக்கு: பிந்தியதே வறுமை யொழிப்பு. பிந்தியதைப் பாரதி விரும்பினுர்,